இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஊட்டி பஸ்நிலையம் அருகே நடந்து வரும் நகராட்சி அறிவியல் பூங்காவில் அரிய விலங்குகள், கற்கால மனிதர்களின் உருவங்கள் காட்சிபடுத்தப்பட்டு உள்ளன.
13-11-2025 | 10:34
விம்கோநகர், மண்ணடி, வண்ணாரப்பேட்டை உட்பட 10 மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தங்களின் கூரைகளில் சோலார் பேனல்கள் அமைக்கும் பணி துவங்கப்பட்டு உள்ளன. இடம்: வண்ணாரப்பேட்டை, மெட்ரோ ரயில் நிலையம்.
13-11-2025 | 10:32
தை மாதத்தை வட மாநிலத்தவர்கள், மகர மாதம் என்று அழைக்கின்றனர். அப்போது கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் உ.பி.,யின் பிரயாக்ராஜில் பக்தர்கள் புனித நீராடுவர். அவர்களின் வசதிக்காக, கங்கை மீது தற்காலிக மிதவைப் பாலங்கள் கட்டும் பணி இப்போதே துவங்கி விட்டது.
13-11-2025 | 10:01
சீனாவின் சிசுவான் மாகாணத்தில் புதிதாக கட்டப்பட்ட ஹோங்கி பாலமானது உடைந்து விழுந்து விபத்திற்குள்ளானது.
13-11-2025 | 08:41
மேற்காசிய நாடான ஈரானில் பெண்களுக்கு பல கட்டுபாடுகள் உள்ளன. ஹிஜாப் எனப்படும் முகத்தை மறைக்கும் துணியை அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்கு எதிராக 2022ல் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. தற்போது சமூக, கலாசார சட்ட கட்டுப்பாடுகளை உடைத்து, ஆங்காங்கே பெண்கள், பைக் ஓட்டத் துவங்கி உள்ளனர். இடம்: டெஹ்ரான்.
13-11-2025 | 08:41
கார்த்திகை தீப திருவிழா நெருங்குவதையொட்டி, விற்பனைக்கு வந்துள்ள அகல் விளக்குகளை ஆர்வமுடன் வாங்கும் பெண். இடம்: திருவான்மியூர், சென்னை.
13-11-2025 | 08:40