இன்றைய போட்டோ
மேற்காசிய நாடான ஈரானில் பெண்களுக்கு பல கட்டுபாடுகள் உள்ளன. ஹிஜாப் எனப்படும் முகத்தை மறைக்கும் துணியை அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்கு எதிராக 2022ல் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. தற்போது சமூக, கலாசார சட்ட கட்டுப்பாடுகளை உடைத்து, ஆங்காங்கே பெண்கள், பைக் ஓட்டத் துவங்கி உள்ளனர். இடம்: டெஹ்ரான்.
13-11-2025 | 08:41
மேலும் இன்றைய போட்டோ
கார்த்திகை தீப திருவிழா நெருங்குவதையொட்டி, விற்பனைக்கு வந்துள்ள அகல் விளக்குகளை ஆர்வமுடன் வாங்கும் பெண். இடம்: திருவான்மியூர், சென்னை.
13-11-2025 | 08:40
யானை பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் கோவில் திருவிழாக்களில் அவற்றின் பங்கேற்பு குறித்து ஆலோசிப்பதற்காக, யானை உரிமையாளர்கள் சங்க மாநாடு நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட யானைகளுடம் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்த மக்கள். இடம்: திருவனந்தபுரம், கேரளா.
13-11-2025 | 08:40
டில்லி செங்கோட்டை அருகே சமீபத்தில் காரை வெடிக்க செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 12 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயம் அடைந்து எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
13-11-2025 | 08:39
டாஸ்மாக் ஊழியர்களின் பணியை நிரந்தரம் செய்யக்கோரி, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தினர், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இடம்: ஜார்ஜ் டவுன்.
12-11-2025 | 18:58
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை காண திரண்ட பக்தர்கள்.
12-11-2025 | 18:57
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தலைமைச் செயலக ஊழியர்கள் உணவு இடைவெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12-11-2025 | 18:57