உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தமிழக வெற்றி கழக ஆர்ப்பாட்டத்திற்கு போடப்பட்ட சாமினா பந்தலை போலீசார் அனுமதி மறுக்கப்பட்டதால் அகற்றப்பட்டது.

16-11-2025 | 05:47


மேலும் இன்றைய போட்டோ

எண்ணூர் துறைமுகம்- மாமல்லபுரம் வரை 12,301 கோடி ரூபாயில், சென்னை சாலை திட்ட பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூரில் கூவம் ஆற்றில் நடந்து வந்த மேம்பால பணி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ளது.

16-11-2025 | 09:33


பழங்குடியின மக்களின் தலைவர் பிர்சா முண்டாவின் பிறந்த நாள், பழங்குடியின மக்களின் கவுரவ தினமாக கொண்டாடப்படுகிறது. குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் தேடியாபாடாவில் உள்ள, பிர்சா முண்டாவின் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி.

16-11-2025 | 09:05


மேற்காசிய நாடான ஈரானின் தலைநகர் டெஹ்ரான் அருகே ராணுவ அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு நடந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஏவுகணை மீது அமர்ந்து விளையாடிய சிறுவன்.

16-11-2025 | 07:06


தென் அமெரிக்க நாடான பிரேசிலின் பெலம் நகரில் காலநிலை உச்சி மாநாடு நடக்கிறது. இதில் அந்நாட்டின் பழங்குடியின செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். பாரம்பரிய உடை, முக அலங்காரம், இசைக்கருவிகள் ஆகியவற்றுடன் வந்த அவர்கள், பூமியின் நுரையீரலான அமேசான் காட்டை காப்பாற்றக் கோரி கோஷமிட்டனர்.

16-11-2025 | 07:06


பீஹார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மஹாபோதி கோவில் கோபுரத்தில், 12 ஆண்டுகளுக்கு முன், 300 கிலோவில் தங்க தகடு ஓட்டும் பணி நடந்தது. அந்த புனித பணியின், 12வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு பிரார்த்தனையில், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த புத்த பிட்சுகளும், பக்தர்களும் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

16-11-2025 | 06:47


நாளை கார்த்திகை மாதம் பிறப்பதையொட்டி, சபரிமலைக்கு மாலை அணியும் அய்யப்ப பக்தர்களுக்காக விதவிதமாக விற்பனைக்கு வந்துள்ள மாலைகள். இடம்: மயிலாடுப்பூர், சென்னை.

16-11-2025 | 06:42


திருவாலங்காடு சாட்சிபூதேஸ்வரர் கோவில் எதிரே உள்ள தீப்பாய்ந்த மண்டபம், அறநிலையத்துறை அதிகாரிகளால் கடந்த மாதம் சீரமைக்கப்பட்டது. மண்டபத்திற்கு சாலை அமைக்க, எதிரே உள்ள அடிபம்பு மண் கொட்டி மூடப்பட்டு உள்ளது.

15-11-2025 | 09:20


ஐப்பசி பூரத்தையொட்டி, காஞ்சிபுரம் சங்கரமடத்தில் இருந்து காமாட்சியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்.

15-11-2025 | 08:50


தாய்லாந்தின் நகோன் பாத்தோம் மாகாணத்தில், தா சின் ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக, அங்குள்ள உணவகத்தின் உள்ளே நீர் புகுந்தது. வெள்ள நீரில் மீன்கள் துள்ளி விளையாடி கொண்டிருக்க அதனை ரசித்த படியே, வாடிக்கையாளர்கள் உணவை ருசித்துக் கொண்டிருந்தனர்.

15-11-2025 | 08:37