உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

காஞ்சிபுரம் சித்தி விநாயகர் பூந்தோட்டம் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது. இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், குவியலாக இருந்த குப்பை தூய்மை பணியாளர்கள் வாயிலாக அகற்றப்பட்டது.

17-11-2025 | 07:03


மேலும் இன்றைய போட்டோ

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை சன்னிதானத்தில் ஸ்ரீகோவில் நடையை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்தார்.

17-11-2025 | 07:21


குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடந்து வரும் புல்லட் ரயில் திட்டப் பணிகளை, பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார். அப்போது புல்லட் ரயில் மாதிரி வடிவம் வாயிலாக திட்டப் பணிகளை விவரித்த இன்ஜினியர்.

17-11-2025 | 07:19


செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

17-11-2025 | 06:54


சென்னையில் உள்ள பல்வேறு நிழற்குடைகள் நவீன வடிவம் அடைந்து வரும் நிலையில், அடையாறு, தொல்காப்பியர் பூங்கா பஸ் நிறுத்த பயணியர் நிழற்குடையில் அவ்வழியே செல்வோரை கவரும் விதமாக வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.

17-11-2025 | 06:44


கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள தென்பெண்ணை ஆறு கும்தா மேடு தரைப்பாலத்தில் ஆபத்தை உணராமல் தண்ணீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்

17-11-2025 | 03:03


தமிழகம் மாதிரி பள்ளிகள் சார்பில் குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகள் சங்கமம் கலை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இடம்: எழும்பூர் அருங்காட்சியகம்.

17-11-2025 | 03:01


தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள ஜீஹூ கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவ, மாணவியர்.

16-11-2025 | 09:59


எண்ணூர் துறைமுகம்- மாமல்லபுரம் வரை 12,301 கோடி ரூபாயில், சென்னை சாலை திட்ட பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூரில் கூவம் ஆற்றில் நடந்து வந்த மேம்பால பணி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ளது.

16-11-2025 | 09:33


பழங்குடியின மக்களின் தலைவர் பிர்சா முண்டாவின் பிறந்த நாள், பழங்குடியின மக்களின் கவுரவ தினமாக கொண்டாடப்படுகிறது. குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் தேடியாபாடாவில் உள்ள, பிர்சா முண்டாவின் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி.

16-11-2025 | 09:05