உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நடந்த துலா உற்சவ தீர்த்தவாரியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.

17-11-2025 | 07:59


மேலும் இன்றைய போட்டோ

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் தன்னார்வ அமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை பொருத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு பேட்டரியில் இயங்கும் செயற்கை கை பொருத்தப்பட்ட நிலையில், அதை இயக்குவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

17-11-2025 | 07:38


குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் மனிதநேயத்திற்கான நடைப்பயணம் நடந்தது. ஆமதாபாத் செஞ்சிலுவை சங்கம் ஏற்பாடு செய்திருந்த, இந்நிகழ்சியில் மாற்றுத்திறனாளிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

17-11-2025 | 07:34


புதுடில்லி வசந்த விஹாரில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் ஸ்ரீ சங்கர வித்யா கேந்திரா உள்ளது. அங்குள்ள ஸ்ரீ சாரதாம்பாள், ஈஸ்வரர் மற்றும் ஆதிசங்கரர் கோவில்களுக்கு, சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் தனது திருக்கரங்களால் கும்பாபிஷேகம் செய்து அருளினார்.

17-11-2025 | 07:28


கேரள மாநிலம், பாலக்காடு கல்பாத்தியில் நான்கு கோவில்களின் ஆறு தேர்கள் திருவீதியுலா வந்த ரத சங்கமம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

17-11-2025 | 07:24


மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை சன்னிதானத்தில் ஸ்ரீகோவில் நடையை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்தார்.

17-11-2025 | 07:21


குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடந்து வரும் புல்லட் ரயில் திட்டப் பணிகளை, பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார். அப்போது புல்லட் ரயில் மாதிரி வடிவம் வாயிலாக திட்டப் பணிகளை விவரித்த இன்ஜினியர்.

17-11-2025 | 07:19


காஞ்சிபுரம் சித்தி விநாயகர் பூந்தோட்டம் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது. இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், குவியலாக இருந்த குப்பை தூய்மை பணியாளர்கள் வாயிலாக அகற்றப்பட்டது.

17-11-2025 | 07:03


செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

17-11-2025 | 06:54


சென்னையில் உள்ள பல்வேறு நிழற்குடைகள் நவீன வடிவம் அடைந்து வரும் நிலையில், அடையாறு, தொல்காப்பியர் பூங்கா பஸ் நிறுத்த பயணியர் நிழற்குடையில் அவ்வழியே செல்வோரை கவரும் விதமாக வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.

17-11-2025 | 06:44