உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பகலில் அடிக்கும் வெயிலை தாங்க முடியாமல் துப்பட்டா மற்றும் குடை பிடித்து வெயிலிருந்து தப்பிக்கும் பெண்கள். இடம் கோவை, ரயில் நிலையம்

17-11-2025 | 12:37


மேலும் இன்றைய போட்டோ

கார்த்திகை சோமவார்த்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.

17-11-2025 | 09:11


கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மதுரை மேல மாசி வீதி ஆனந்த ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.

17-11-2025 | 09:05


களிமண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இடம்: உடுமலை.

17-11-2025 | 08:28


குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் மேகமூட்டம் தென்பட்டாலும், அவ்வப்போது மலைகளை தழுவி செல்லும் மேகம் அனைவரையும் பரவசப்படுத்துகிறது. இடம்: குன்னூர் அருகே, கோடேரி கிராமம்.

17-11-2025 | 08:24


ஊட்டி மார்க்கெட் சாலை எப்போதும் பிசியாக காணப்படுகிறது. பல்வேறு தேவைகளுக்கு வரும் மக்கள் வாகனங்களை சாலையில் இருபுறமும் தாறுமாறாக நிறுத்தி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். விதி மீறலால் சாலையை கடந்து செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுவதும், சாலையை கடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

17-11-2025 | 08:11


அமெரிக்க அதிபர் டிரம்ப், தன் பதவியை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவதாகவும், அரசியலமைப்பை அவர் மதிக்கவில்லை என்று கூறி, அவர் பதவி விலக வலியுறுத்தி, 'பாசிசத்தை எதிர்ப்போம்' என்ற அமைப்பினர் பேரணி நடத்தினர். இடம்: வாஷிங்டன்.

17-11-2025 | 08:04


மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நடந்த துலா உற்சவ தீர்த்தவாரியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.

17-11-2025 | 07:59


ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் போலீஸ் ஸ்டேஷனில், பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து சமீபத்தில் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அவர்களிடம் தடுப்பை கடந்து செல்ல அனுமதி கேட்டு நின்ற பெண்.

17-11-2025 | 07:55


உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் தன்னார்வ அமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை பொருத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு பேட்டரியில் இயங்கும் செயற்கை கை பொருத்தப்பட்ட நிலையில், அதை இயக்குவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

17-11-2025 | 07:38