உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

காஞ்சிபுரம் பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில் இளைஞர்கள் சிலர் விபரீதத்தை விலை கொடுத்து வாங்குவது போல தடுப்பணையின் மதகு பகுதியில் விளையாடுகின்றனர்.

19-11-2025 | 08:51


மேலும் இன்றைய போட்டோ

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் துபாய் ஏர் ஷோ நடந்து வருகிறது. இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வான் டாக்ஸி அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

19-11-2025 | 08:38


மஹாராஷ்டிராவின் மும்பைக்கு எரிவாயு வினியோகம் செய்யும் குழாயில் ஏற்பட்ட சேதம் காரணமாக மும்பை, தானே மற்றும் நவி மும்பை ஆகிய இடங்களில் சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயு நிரப்பும் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதன் காரணமாக ஆட்டோ, டாக்சிகள், பள்ளி பஸ்கள் மற்றும் சிஎன்ஜி மூலம் இயங்கும் பிற வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

19-11-2025 | 08:32


கேரள மாநிலம், பாலக்காட்டில் நெல் வயல்களில் தற்போது நாற்று நடும் சீசன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோட்டாயி பகுதியில் உழவு செய்யப்பட்டு நாற்று நடும் வயல் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

19-11-2025 | 08:23


சென்னையில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்படும் சைபர் படகு.

19-11-2025 | 08:04


சென்னையில் நேற்று திடீரென பரவலாக மழை பெய்தது, இடம்: ராஜாஜி சாலை,ஜார்ஜ் டவுன்,

19-11-2025 | 06:08


சென்னையில் பரவலாக மழை பெய்து வருவதால் சென்னை பிராட்வே பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீர். இடம்: என் எஸ் சி போஸ் சாலை.

19-11-2025 | 06:08


புதுச்சேரியில் காலையிலிருந்து இரவு முழுமையும் லேசான தொடர் மழை பெய்தது. தேங்கியுள்ள மழை நீரில் பிரதிபலிக்கும் ராஜீவ் காந்தி சிக்னல்.

19-11-2025 | 06:06


சென்னையில் திடீரென பரவலாக மழை பெய்தது இடம்: ராஜாஜி சாலை,ஜார்ஜ் டவுன்,

18-11-2025 | 22:10


சென்னையில் திடீரென பரவலாக மழை பெய்தது இடம்: ராஜாஜி சாலை,ஜார்ஜ் டவுன்,

18-11-2025 | 22:09