இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
விருதுநகர் அருகே மீசலூரில் மக்காச்சோளம் பயிரிட விவசாயிகள் நிலத்தை உழுதுபோட்டுள்ளனர்.
19-11-2025 | 16:43
கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வரவேற்றார்.
19-11-2025 | 14:56
கோவை அரசு மருத்துவமனை முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மை பணியாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
19-11-2025 | 11:55
காஞ்சிபுரம் பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில் இளைஞர்கள் சிலர் விபரீதத்தை விலை கொடுத்து வாங்குவது போல தடுப்பணையின் மதகு பகுதியில் விளையாடுகின்றனர்.
19-11-2025 | 08:51
குன்னூரில் காலை நேரத்தில் வெயிலான காலநிலை நிலவி வந்த நிலையில், மதியத்துக்கு மேல் மேமூட்டத்துடன் சாரல் மழை பெய்ததால், கடும் குளிரான காலநிலை நிலவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
19-11-2025 | 08:42
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் துபாய் ஏர் ஷோ நடந்து வருகிறது. இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வான் டாக்ஸி அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
19-11-2025 | 08:38
மஹாராஷ்டிராவின் மும்பைக்கு எரிவாயு வினியோகம் செய்யும் குழாயில் ஏற்பட்ட சேதம் காரணமாக மும்பை, தானே மற்றும் நவி மும்பை ஆகிய இடங்களில் சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயு நிரப்பும் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதன் காரணமாக ஆட்டோ, டாக்சிகள், பள்ளி பஸ்கள் மற்றும் சிஎன்ஜி மூலம் இயங்கும் பிற வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
19-11-2025 | 08:32