இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
பூங்கா ரயில் நிலையத்தில், பயணியரை கவரும் வகையில், மணி கூண்டு கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
21-11-2025 | 22:07
தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை கல்லூரி மாணவர்களின் ஒவிய கண்காட்சி சென்னை கோபாலபுரத்தில் நடந்தது.
21-11-2025 | 22:07
இலைகள் உதிர்ந்த மரத்தின் கிளைகளில் இரவில் இரை தேட சென்று, பகலில், ஓய்வெடுக்கும் வவ்வால்கள், அம்மரத்தை தனித்துவமாக காட்சியளிக்க செய்கிறது. இடம்: உடுமலை.
21-11-2025 | 07:57
ஊட்டியில் உள்ள கர்நாடகா தோட்டக்கலைத்துறை பூங்கா பசுமையாக காணப்படுவதால், இங்கு திரளான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
21-11-2025 | 07:51
கார்த்திகை மாத அமாவாசையையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்த காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்.
21-11-2025 | 07:21
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, தமிழக அரசின் பூம்புகார் விற்பனையகத்தில், பாரம்பரிய பித்தளை உள்ளிட்ட விளக்குகளின் விற்பனை மற்றும் கண்காட்சி துவங்கியது. டிசம்பர் 6ம் தேதி வரை நடக்கும், இந்த கண்காட்சியை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம். இடம்: அண்ணாமலை
21-11-2025 | 07:17
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் உள்ள அவரின் பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய்பாபாவின் ஆசிரமமான பிரசாந்தி நிலையத்தில் 11வது உலக ஆன்மிக மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, முன்னதாக சத்ய சாய்பாபாவின் மஹா சமாதியில் மரியாதை செலுத்தினார்.
21-11-2025 | 07:09