இன்றைய போட்டோ
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாக்ரமென்டோ நகரில், வன்முறையை தூண்டுவதாக 1949ல் காமிக்ஸ் புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சட்டம் பெரிய அளவில் பயன்பாட்டில் இல்லாதபோதும், அதை முற்றிலுமாக நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள கடைகளில் அதிகளவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காமிக்ஸ் புத்தகங்கள்.
23-11-2025 | 10:37
மேலும் இன்றைய போட்டோ
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி நிதிகள் சங்கமிக்கும் பகுதிக்கு விருந்தினர்களாக, வெளிநாடுகளில் இருந்து சீகல் பறவைகள் திரண்டு வந்துள்ளன. இந்த பக்தர்கள் பயணிக்கும் படகுகளுக்கு நெருக்கமாக பறந்து செல்வது ரம்மியமாக காட்சி.
23-11-2025 | 10:29
மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்படுவதை தொடர்ந்து, அங்கு சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறப்படும் வங்கதேசத்தினர் தங்கள் சொந்த ஊர் செல்ல எல்லையோர ஹகீம்பூர் சோதனைச்சாவடியில் குடும்பத்தினருடன் காத்திருந்தனர்.
23-11-2025 | 08:40
மழையோ, வெயிலோ: நாய் செய்யும் தொழிலை ரசித்து செய்வதே சுகமானது தான். வாகனத்திற்கு வண்ணங்களால் ஆடை அணிவித்தது போல குடைகளை வைத்து வியாபாரம் செய்கிறார், இவர். இடம்: சிங்காநல்லூர், கோவை.
23-11-2025 | 08:34
திருநெல்வேலி மாவட்டம் பிரானஞ்சேரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 1.5 லட்சத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன...
23-11-2025 | 06:30
சத்ய சாய்பாபா 100 வது பிறந்தநாள் விழாவை ஒட்டி, திருப்பூர் நல்லூர் சத்ய சாய் பஜனை மண்டல் சார்பில, மலர் பல்லக்கு வீதி உலா வந்தது.
23-11-2025 | 06:25
விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் அதிருப்தி அடைந்த வியாபாரிகள், விழுப்புரம் மாவட்டம் எல்லசத்திரம் சாலை மற்றும் காலி இடங்களில் வெங்காயத்தை கொட்டி சென்றனர்.
22-11-2025 | 08:00