உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் மழையின் காரணமாக மீனவர்கள் கரையில் விசை படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

24-11-2025 | 14:32


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பாக, எஸ்.ஐ.ஆர்., குறித்து விழிப்புணர்வு கால்பந்து போட்டி நடைபெற்றது.

24-11-2025 | 14:27


நாளை திறக்கப்பட உள்ள செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள, முல்லைக்கு தேர் கொடுத்த பாரி அலங்காரம். இடம்: கோவை

24-11-2025 | 14:26


அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கிறிஸ்துமஸ் மரங்கள் எனும் 'ப்ரேசர் பிர்' மரங்கள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இடம்: பென்சில்வேனியா, அமெரிக்கா.

24-11-2025 | 09:11


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்து கணிசமாக அதிகரித்ததால், திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குறுக்குத்துறை முருகன் கோவிலை மூழ்கடித்தபடி தண்ணீர் சீறி பாய்ந்தது.

24-11-2025 | 09:06


காஞ்சிபுரம் உத்திரமேரூர் ஒன்றியம், மதூர் கிராமத்தின் மலை சார்ந்த பகுதியை சுற்றி வளர்ந்துள்ள பனை மரக்கன்றுகளின் செழுமை, பசுமை ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

24-11-2025 | 08:54


கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியான வீதி விழா கோவை கிராஸ்கட்ரோட்டில் நடந்தது. இதில் பார்வையாளர்களை கவர்ந்த பாரம்பரிய நடன நிகழ்ச்சி.

24-11-2025 | 08:47


ஊட்டியில் இரண்டாவது சீசன் நிறைவடையும் நிலையில், அரசு தாவரவியல் பூங்காவுக்கு வார நாட்களில் கணிசமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். அங்குள்ள கண்ணாடி மாளிகையில் காட்சிப்படுத்தப்பட்ட பல வண்ண மலர்களை ரசித்து செல்லும் சுற்றுலா பயணியர்.

24-11-2025 | 08:41


ஊட்டி நகராட்சி கமிஷனர் பயன்படுத்தும் இந்த வாகனம் ஆய்வு மற்றும் பல்வேறு தேவைகளுக்கு நகர் பகுதிக்கு வரும் போது, பல மணி நேரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். விதிமீறலை கண்காணித்து அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீசாரும் மவுனம் காக்கின்றனர். மணிக்கூண்டு சாலையில் இப்படி விதிமீறி நிறுத்தப்பட்ட அரசு வாகனத்தால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.

24-11-2025 | 08:36


பொள்ளாச்சி ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியில், சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பாபா.

24-11-2025 | 08:30