இன்றைய போட்டோ
தஞ்சாவூர் பெரியகோவில் எதிரே ஏற்பட்ட விபத்தில், உடைந்த கார் கண்ணாடிகள் சாலையில் சிதறி கிடந்தன. இதனால் பிறருக்கு இடையூறு ஏற்படக்கூடாது என எண்ணி, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., ராஜகண்ணன், யாரையும் எதிர்பார்க்காமல் தானே துடைப்பம் போட்டு சுத்தம் செய்தார். இந்த செயலை பலரும் பாராட்டி சென்றனர்.
26-11-2025 | 08:22
மேலும் இன்றைய போட்டோ
உடுமலை ஐஸ்வர்யா நகர் ரோட்டில் உள்ள வேகத்தடையில் வெள்ளை கோடுகள் அடிக்காதால் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
22-11-2026 | 13:56
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
22-11-2026 | 13:55
தமிழ்நாடு ஓய்வூதிய சங்கம் சார்பில் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் மாவட்ட தலைவர் புருஷோத்தமன் பேசினார்.
22-11-2026 | 13:55