உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வழங்கினார்.

26-11-2025 | 12:19


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நகராட்சி டேவிஸ் பூங்கா பராமரிக்கப்படாமல் உள்ளதால், வண்ண மலர் செடிகள் இல்லாமலும், சுற்றுலா பயணிகள் வருகை இன்றியும், வெறிச்சோடி காணப்படுகிறது.

26-11-2025 | 10:18


மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், பாபநாசம் அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

26-11-2025 | 09:59


செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், செவ்வாய் தரிசனத்திற்காக அதிக அளவில் குவிந்த பக்தர்கள், நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

26-11-2025 | 09:06


ஜம்மு-காஷ்மீரில் கடுங்குளிர் காலம் துவங்கிவிட்டது. இதனால் மரங்களில் இலைகளுக்கு பதில் பனிக்கட்டிகள் உறைந்து கிடக்கின்றன.

26-11-2025 | 08:28


தஞ்சாவூர் பெரியகோவில் எதிரே ஏற்பட்ட விபத்தில், உடைந்த கார் கண்ணாடிகள் சாலையில் சிதறி கிடந்தன. இதனால் பிறருக்கு இடையூறு ஏற்படக்கூடாது என எண்ணி, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., ராஜகண்ணன், யாரையும் எதிர்பார்க்காமல் தானே துடைப்பம் போட்டு சுத்தம் செய்தார். இந்த செயலை பலரும் பாராட்டி சென்றனர்.

26-11-2025 | 08:22


திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணை 143 அடி உயரம் கொண்டது. தற்போது 131 அடியை எட்டி அணை முழுவதும் நிரம்பிய நிலையில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

26-11-2025 | 08:02


புதுச்சேரியில் விரதம் இருந்த பெண் பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல வசதி இல்லாததால் கோவிந்தசாலை ஐயப்பன் கோவிலில் விரதம் முடிக்க பாதயாத்திரையாக வந்தனர்.

26-11-2025 | 08:01


கோவை லீ மெரிடியன் ஓட்டலில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் உயர்தர பம்புகள் மற்றும் மோட்டார் உற்பத்தி தொழில் மேம்பாட்டுக்காக திறன்மிகு மையங்கள் அமைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

25-11-2025 | 21:25


கோவை லீ மெரிடியன் ஓட்டலில் நடந்த டி.என் ரைசிங் கோவை எனும் முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்ட தொழில் துறையினர்.

25-11-2025 | 21:24