இன்றைய போட்டோ
குரங்குகள் என்றாலே மரத்திற்கு மரம் தாவிச் சென்று, பழங்களை பறித்து உண்ணும் இனம் என்று இருந்த நிலை மாறிவிட்டது. மரம் ஏறுவதை விட்டுவிட்டு கார் செல்லும் பாதைகளில் குரங்குகள் காத்திருப்பது வழக்கமாகி விட்டது. விருத்தாசலம் திருச்சி நான்கு வழி சாலையில் கருவேப்பிலங்குறிச்சி காப்பு காட்டில் வீசி எறியப்படும் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகள்.
27-11-2025 | 07:34
மேலும் இன்றைய போட்டோ
சென்னை பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இருந்தும் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் மக்கள்
26-11-2025 | 22:10
பருவமழைக் காலம் துவங்கவுள்ள நிலையில் பக்கிங்காம் கால்வாய் தூர்வாராமல் கரைகள் முழுவதும் செடிகள் படர்ந்து ஓடைபோல் காட்சியளிக்கிறது.இடம் : நீலாங்கரை
26-11-2025 | 22:09
சில தினங்களாக பெய்த மழையால் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை செண்பகத்தோப்பு வனப்பகுதி பேயனாற்றில் நீர்வரத்துவங்கியுள்ளது.
26-11-2025 | 22:09
சென்னையில் குளிர்காலம் துவங்கியதால் போர்வை விபரம் சூடுபிடித்தது இடம் : ஒய்ட்ஸ் ரோடு ராயபேட்டை
26-11-2025 | 22:09
உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற தலைப்பில் தேமுதிக சார்பில் மேட்டுப்பாளையத்தில் பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார்.
26-11-2025 | 22:08
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வழங்கினார்.
26-11-2025 | 12:19
காஞ்சிபுரம் வல்லக்கோட்டை முருகன் கோவிலில், சஷ்டி மண்டபத்தில் உற்சவர் வள்ளி தெய்வாணை சமேத முருகனுக்கு செண்பகம், சாமந்தி, வெற்றிலை, எலுமிச்சை மாலைகள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
26-11-2025 | 10:23