உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் இருந்த காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளத்தின் சுற்றுச்சுவர் சீரமைக்கப்பட்டு உள்ளது.

27-11-2025 | 08:09


மேலும் இன்றைய போட்டோ

பந்தலூரில் அதிகாலை நேரத்தில் ஆதவனின் கதிர்கள் பட்ட போது, தங்க நிறத்தில் மின்னும் பசுந்தேயிலை, இப்பகுதிகளின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

27-11-2025 | 07:58


இயற்கை எழில் கொஞ்சும் போடி- மூணாறு செல்லும் போடிமெட்டு மலைப்பாதையில் ரோட்டை தழுவிச் செல்லும் பனி மூட்டம்.

27-11-2025 | 07:56


ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் முதல் பிரகாரத்தில் மழைநீர் தேங்கியது.

27-11-2025 | 07:53


பயங்கரவாத தாக்குதல்களின் போது பொதுமக்களை காப்பாற்றுவது குறித்த ஒத்திகையில் ஈடுபட்ட பீஹார் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார். இடம்: பாட்னா

27-11-2025 | 07:40


குரங்குகள் என்றாலே மரத்திற்கு மரம் தாவிச் சென்று, பழங்களை பறித்து உண்ணும் இனம் என்று இருந்த நிலை மாறிவிட்டது. மரம் ஏறுவதை விட்டுவிட்டு கார் செல்லும் பாதைகளில் குரங்குகள் காத்திருப்பது வழக்கமாகி விட்டது. விருத்தாசலம் திருச்சி நான்கு வழி சாலையில் கருவேப்பிலங்குறிச்சி காப்பு காட்டில் வீசி எறியப்படும் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகள்.

27-11-2025 | 07:34


சென்னை பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இருந்தும் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் மக்கள்

26-11-2025 | 22:10


பருவமழைக் காலம் துவங்கவுள்ள நிலையில் பக்கிங்காம் கால்வாய் தூர்வாராமல் கரைகள் முழுவதும் செடிகள் படர்ந்து ஓடைபோல் காட்சியளிக்கிறது.இடம் : நீலாங்கரை

26-11-2025 | 22:09


சில தினங்களாக பெய்த மழையால் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை செண்பகத்தோப்பு வனப்பகுதி பேயனாற்றில் நீர்வரத்துவங்கியுள்ளது.

26-11-2025 | 22:09


சென்னையில் குளிர்காலம் துவங்கியதால் போர்வை விபரம் சூடுபிடித்தது இடம் : ஒய்ட்ஸ் ரோடு ராயபேட்டை

26-11-2025 | 22:09