உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் பெரும்பாலான படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அப்பணியை எதிர்த்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர். அப்போது தொண்டர் ஒருவர் போலீசாரின் தடுப்பைத் தாண்டி தலைகீழாக குதித்தார். இடம்: லக்னோ, உத்தரபிரதேசம்.

28-11-2025 | 08:01


மேலும் இன்றைய போட்டோ

குளிர் சீசனை அனுபவிக்க சுற்றுலா தலங்களுக்கு ஏராளமானோர் வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், தாஜ்மஹால் அருகே உள்ள ஒரு ஹோட்டலின் மொட்டை மாடியில் அமர்ந்து காபியை ருசித்தபடி, அதன் அழகை ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணியர்.

28-11-2025 | 07:49


கோவா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண ஜீவோத்தம் மடத்தில், 77 அடி உயர வெண்கல ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே உயரமான இந்த சிலையை இன்று பிரதமர் மோடியை திறந்து வைத்தார்.

28-11-2025 | 07:43


கோவை நேரு ஸ்டேடியத்தில் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

27-11-2025 | 22:47


கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பெண்ணையாற்றில் பேரிட மீட்பு குழுவினர் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

27-11-2025 | 22:43


கடலூர் அடுத்த நொச்சி காடு கிராமத்தில் தொழில் பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி பொதுமக்களை சந்தித்து பேசினார்.

27-11-2025 | 22:42


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் முறையான பார்க்கிங் வசதி இல்லாததால் ரோட்டிலேயே நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.

27-11-2025 | 22:42


திருவள்ளூர் செங்குன்றம் சாலையில் உள்ள விஷ்ணுவாக்கம் கிராமத்தில் எம்ஜிஆர் நகர் உள்ள விவசாய நிலத்தில் பழமையான லஷ்மி நரசிம்மர் சிலை. ஒரு கால பூஜை கூட நடைபெறாமல் உள்ளது

27-11-2025 | 22:41


திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை அச்சுறுத்தும் வகையில் நாய்கள்.

27-11-2025 | 22:41


புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

27-11-2025 | 22:40