உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

செங்கல்பட்டு மாமல்லபுரம் பேரிடர் கால சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இருளர்களுக்கு நகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது.

01-12-2025 | 06:39


மேலும் இன்றைய போட்டோ

டிட்வா புயல் காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடல் அலை சீற்றத்துடன் காணப்பட்டன.

30-11-2025 | 15:57


கார்த்திகை திருநாளை முன்னிட்டு சிவகங்கையில் மண் விளக்குகள் விற்பனையாகி வருகிறது.

30-11-2025 | 15:56


இயற்கையை ரசித்து கொண்டிருக்கும் பறவை. இடம்:வாலாங்குளம், கோவை

30-11-2025 | 15:56


தினமலர் நாளிதழின் லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழா கோவையில் நடந்தது. இதில் கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பங்கேற்று ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

30-11-2025 | 10:55


கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில், சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் கடற்கரைக்கு வந்து ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இடம்: தரங்கம்பாடி கடற்கரை, மயிலாடுதுறை.

30-11-2025 | 10:55


திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் கழிப்பறைக்கு கூரை அமைக்கப்படாமல் இருந்ததால், மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து அரசு பள்ளியில் உள்ள கழிப்பறைக்கு கூரை அமைக்கப்பட்டு உள்ளது.

30-11-2025 | 09:39


உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள கோர்க்கா மையத்தில் பயிற்சி முடிந்து, நம் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றவுள்ள அக்னிவீரர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

30-11-2025 | 09:15


வரும் 2030ல் நடக்க உள்ள காமன் வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் உரிமையை குஜராத்தில் உள்ள ஆமதாபாத் பெற்றுள்ளது. இதையடுத்து, அங்குள்ள நரேந்திர மோடி மைதானத்தை சுற்றியுள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் துவங்கி உள்ளன.

30-11-2025 | 09:11


கார்த்திகை மாதத்தையொட்டி, தீப உற்சவம் கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் நடந்தது. இதில் விளக்கேற்றி வழிபாடு செய்த பக்தர்கள்.

30-11-2025 | 09:07