இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. உண்ணாமுலை அம்மனும்-அண்ணாமலையாரும் சிறப்பு அலங்காரத்தில் பெரிய தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
01-12-2025 | 06:29
டிட்வா புயல் காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடல் அலை சீற்றத்துடன் காணப்பட்டன.
30-11-2025 | 15:57
தினமலர் நாளிதழின் லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழா கோவையில் நடந்தது. இதில் கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பங்கேற்று ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
30-11-2025 | 10:55
கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில், சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் கடற்கரைக்கு வந்து ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இடம்: தரங்கம்பாடி கடற்கரை, மயிலாடுதுறை.
30-11-2025 | 10:55
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் கழிப்பறைக்கு கூரை அமைக்கப்படாமல் இருந்ததால், மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து அரசு பள்ளியில் உள்ள கழிப்பறைக்கு கூரை அமைக்கப்பட்டு உள்ளது.
30-11-2025 | 09:39