இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
வயல்களில் நெல் நடவு செய்வதற்காக விவசாயிகள் நாற்றங்கால் அமைத்துள்ளனர். இடம்: உடுமலை அருகே மடத்துக்குளம்.
03-12-2025 | 07:55
கார்த்திகை தீப திருவிழா கொண்டாட்டத்துக்காக, மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள விளக்குகள்.
03-12-2025 | 07:49
ஐரோப்பிய நாடான பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில், வரி உயர்வு, சமூக பாதுகாப்பு பங்களிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட பட்ஜெட் அம்சங்களை எதிர்த்து நடந்த போராட்டம், வன்முறையானது. இதை தொடர்ந்து, பட்ஜெட்டை அரசு திரும்ப பெற்றது.
03-12-2025 | 07:21
வட மாநிலங்களில் கடுங்குளிர் வாட்டி வதைக்கிறது. பஞ்சாபின் அமிர்தசரசில், நிலவும் 14 டிகிரி செல்ஷியஸ் குளிரில், வேலைக்கு சென்ற விவசாயிகள்.
03-12-2025 | 07:10
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, சென்னை எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு கட்டைகள் சேதம் அடைந்துள்ளன.
03-12-2025 | 07:02