இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருவள்ளூர் மாவட்டம், தொழுதாவூரில் பைப் லைன் உடைந்து குடிநீர் வீணாகி வருவதாக நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து ஊராட்சி சார்பில் பைப் லைன் சீரமைக்கப்பட்டு உள்ளது.
05-12-2025 | 09:12
இதய செயல்பாட்டை கண்டறியும் வகையில், விஐடி சென்னை குழுவினரால் சென்சார் அடிப்படையிலான சிப் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த 'சிப்' பை பஞ்சாப் மாநிலம் மெகாலியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் வழங்கி விஐடி சென்னை குழுவினர் பாராட்டு பெற்றனர்.
05-12-2025 | 09:08
பாசனத்திற்காக தண்ணீர் செல்லும் அமராவதி கால்வாய் கரையில் வளர்ந்துள்ள நாணல்களில் பூத்துள்ள பூக்கள் காண்பதற்கு ரம்யமாக உள்ளது. இடம்: உடுமலை.
05-12-2025 | 09:03
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புழல் மற்றும் சோழவரம் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் செங்குன்றம், புழல், மாதவரம் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இடம்: மாதவரம், சென்னை.
05-12-2025 | 08:39
திருப்பூர், அடுத்த இடுவாய் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்ட களத்திற்கு ஊர்வலமாக வந்த பா.ஜ க மற்றும் பொதுமக்கள்.
04-12-2025 | 21:59
திருப்பூர், அடுத்த இடுவாய் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினர்.
04-12-2025 | 21:59