இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்தும் மெகா வினாடி - வினா இறுதிப்போட்டி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இடம்: சேப்பாக்கம்.
30-01-2026 | 10:40
தைப்பூசத்தையொட்டி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 3 நாட்கள் நடைபெறும் தெப்போத்சவம் துவங்கியது. இதில் ஏலவார்குழலி அம்பிகையுடன், ஏகாம்பரநாதர் மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி உலா வந்தார்.
30-01-2026 | 06:50
காஞ்சிபுரம் வல்லம் வடகால் சிப்காட் சாலையில் இருந்து, வல்லம் கண்டிகை செல்லும் சாலை நடுவே இன்டர்நெட் கேபிள் பழுது பார்ப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் அரைகுறையாக விடப்பட்டு இருந்தது. இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதை அடுத்து, சம்பந்தப்பட்ட நிர்வாகம் கான்கிரீட் கலவை ஊற்றி பள்ளத்தை சீரமைத்தது.
30-01-2026 | 06:50
தை மாத ஏகாதசி தினத்தில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலர் அலங்காரத்தில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் வீதியுலா வந்தார்.
30-01-2026 | 06:49
திருப்பூர் பெருமாநல்லூரில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், தங்கள் வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்தி.
30-01-2026 | 06:49
ஊட்டி காமராஜர் சாகர் அணையின் கரையோரம் வளர்ந்துள்ள ஆகாய தாமரை; பிளாஸ்டிக் கழிவுகளால் பெரும் சுற்றுச்சுழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
30-01-2026 | 06:48
கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவிலில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, தேர் திருவிழா நடந்தது. கோவிலை சுற்றியுள்ள மாடவீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். இடம்: பூங்கா நகர், சென்னை.
30-01-2026 | 06:47