இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கோவையில் உள்ள செம்மொழி பூங்காவை நாளை (டிசம்பர் 11) காலை 10 மணி முதல் பொதுமக்கள் பார்வையிடலாம். அதன் பின் தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பூங்கா செயல்படும்.
10-12-2025 | 08:56
ஊட்டி அருகே உள்ள பைக்காரா ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 100 அடியை எட்ட உள்ளதால், சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் படகு சவாரி செய்து வருகின்றனர்.
10-12-2025 | 08:47
கோவை-மேட்டுப்பாளையம் ரோடு, முருகன் மில் ரோட்டில் மண் புழுதியினால் ஏற்படும் காற்று மாசு, இந்த சாலையை பயன்படுத்துவோரை பாடாய் படுத்துகிறது.
10-12-2025 | 08:41
சென்னையில் நேற்று பனிப்பொழிவு புகை மண்டலம் போல் காணப்பட்டன.இடம்: விம்கோ நகர் ரயில் நிலையம்.
10-12-2025 | 08:38
பிராம் புயலின் தாக்கத்தால் ஐரோப்பிய நாடான பிரிட்டன் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள யார்க் நகரில் பாயும் ஓஸ் நதி கரைபுரண்டு ஓடியதால், வரலாற்றுச் சிறப்புமிக்க நகரின் மையப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
10-12-2025 | 08:34
டில்லி செங்கோட்டையில் கடந்த மாதம் 10ல் காரை வெடிக்க செய்து, தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி உமர், அந்த தாக்குதலுக்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஹூட்முரா வனப்பகுதியில் வெடிகுண்டை வெடிக்க செய்து சோதித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த வனப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
10-12-2025 | 08:29
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், சின்னமண்டலி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு செல்லும் சாலை சகதியாக இருந்தது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து சகதியாக இருந்த சாலையில் ஜல்லி கொட்டி சமன் செய்யப்பட்டது.
10-12-2025 | 08:20