இன்றைய போட்டோ
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடனடியாகஉதவி வழங்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது பிங்க் பெட்ரோல் போலீஸ் வாகனம். இதில் ஓட்டுபவர் முதல்சிறப்பு உதவி ஆய்வாளர் வரை அனைவரும் பெண்களாக இருப்பர். பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த வாகனங்களில் அதிகாரிகள் வலம் வருவர். பெண்களும் தயக்கமின்றி இவர்களிடம் புகார் தருவர். அந்த வாகனத்தை ஓட்டுபவரும், அதில் பயணிப்பவரும் ஆண்களாகவே இருந்தனர். இன்று( டிச.,10) இது பிங்க் பெட்ரோல் வாகனத்தின் அசல் நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளதே. இடம்: கோவை காந்திபுரம் காவல்நிலையம்
10-12-2025 | 22:41
மேலும் இன்றைய போட்டோ
அந்தி சாலையும் மாலை வேளையில் கதிரவன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பக்கிங்காம் கால்வாய் கடலில் கலக்கும் இடமான படகு குழாமில் படகு சவாரி செய்யும் நபர்.இடம் : முட்டுக்காடு
11-12-2025 | 21:25
செம்பரம்பாக்கம் ஏரியின் கரை சீரமைத்து பலப்படுத்தப்பட்ட பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீர்
11-12-2025 | 21:24
ஊட்டி அருகே கோக்கால் கிராமத்தில், கோத்தர் பழங்குடியினர் இறந்தவர்களுக்கு வரசாவு சடங்கு செய்ய கிராமம் அருகேவுள்ள இடத்திற்கு சென்றனர்.
11-12-2025 | 21:24
திருப்பூர் பல்லடம் ரோடு, ரமணாஸ் ஓட்டல் குமரகம் ஹாலில் தேசிய சிந்தனை பேரவை தமிழ்நாடு சார்பில் வந்தே மாதரமும் பாரதியும் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
11-12-2025 | 21:24
மகாகவி பாரதியாரின் 144 வது பிறந்த தினத்தை ஒட்டி டெல்லி தமிழ் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல் முருகன் , மற்றும் தமிழ் சங்க துணை தலைவர் ராகவன் நாயுடு, செயலாளர் முகுந்தன், மற்றும் சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்
11-12-2025 | 21:23
கடலூர் புதுப்பாளையத்தில் ஐய்யப்பா பக்தர்கள் சார்பில் ஐயப்பன் விக்ரக பூஜை நடந்தது.
11-12-2025 | 21:22