உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரின் மையப்பகுதியில் ஓடும் ஜீலம் நதி நீர் நிறைந்து காணப்படும். ஆனால், தற்போது வறண்டுள்ளது. காஷ்மீர் பகுதியில் நிலவும் தீவிர வறட்சி மற்றும் பருவநிலை மாற்றத்தின் தாக்கமே இதற்கு காரணம் எனக்கூறப்படுகிறது. உள்ளூர் மக்கள் வாழ்க்கையிலும், பொருளாதாரத்திலும் ஜீலம் நதிக்கு முக்கிய பங்கு உள்ளதால், இது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

10-12-2025 | 22:44


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு, தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

27-06-2026 | 17:56


ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.

27-06-2026 | 17:55


புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் பைபர் படகில் சென்ற மீனவர்கள் வலையில் சிக்கிய அதிக அளவிலான மீன்கள்.

27-06-2026 | 17:54


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு சந்தன அபிஷேகம் நடந்தது.

27-06-2026 | 17:52


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு தீபாதாரணை நடந்தது.

27-06-2026 | 17:51


சென்னையின் அடையாறு ஆறு கடலில் கலக்கும் இடத்தில் கூட்டமாக இரை தேடி குவிந்துள்ள கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை மற்றும் பறவைகள். இடம் : பெசன்ட் நகர்

27-06-2026 | 17:51


சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.

26-06-2026 | 10:23


சென்னையில் நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையில் இருந்து கீழே இறங்கி சென்று முதல்வர் விஜய் பணி நியமன ஆணை வழங்கியது இணையத்தில் பாராட்டை பெற்றுள்ளது.

24-06-2026 | 11:02


மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனிதநீர் ஊற்றினர். இடம்: குருநாதம்பாளையம், திருப்பூர்.

24-06-2026 | 09:03