இன்றைய போட்டோ
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள, சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு வருவோர் வாகனங்களை கண்டபடி நிறுத்துவதால், தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமமடைந்து வந்தனர். இது குறித்த செய்தி நம் நாளிதழில் படத்துடன் வெளியானதை அடுத்து, வெளி வாகனங்கள் நுழைய வருவாய் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
12-12-2025 | 06:21
மேலும் இன்றைய போட்டோ
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.
10-04-2026 | 18:39
கோடை வந்தால் பழங்கள் தான் ரோட்டில் விற்பனைக்கு வரும் தற்போது ஏர்கூலர், பேன் விற்பனைக்கு வந்துள்ளது. இடம்:திருப்பூர், பல்லடம் ரோடு.
10-04-2026 | 18:39
திருக்கோவிலூர் அடுத்த வி. சித்தாமூர் பகுதியில் மர கரி உற்பத்தி செய்யது தரம் பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
10-04-2026 | 18:39
தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டு சாவடிகளுக்கு அனுப்ப வாக்காளர் பட்டியல்களை சரி பார்க்கும் பணி நடந்தது.
10-04-2026 | 18:38
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரேமலதாவிற்கு ஆதரவாக விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் பிரசாரம் செய்தார்.
10-04-2026 | 18:38