உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பெட்ரோல், காஸ் உள்ளிட்ட எரிபொருள்களுக்கான மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவற்றின் விலை 162 சதவீதம் வரை உயர்ந்துள்ளதைக் கண்டித்து பல்வேறு தொழிற்சங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்கின. அதில் பங்கேற்ற சுரங்கத் தொழிலாளர்கள். இடம்: லா பாஸ்.

23-12-2025 | 09:35


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூரில், முதல்வர் கோப்பைகான கோ-கோ விளையாட்டு போட்டி, அனைப்புதூர், ஏ.கே.ஆர் அகடாமி பள்ளியில் நடந்தது.

30-09-2026 | 14:31


மேட்டுப்பாளையம் நகராட்சி பணியாளர்களுக்கு மருத்துவ சிறப்பு முகாம் நடத்தி பரிசோதனை செய்யப்பட்டது

30-09-2026 | 14:31


காரமடை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ரங்கநாதர் கோவில் முன்பு அமர்ந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

30-09-2026 | 14:30


புதுச்சேரி ரயில் நிலையத்தில் 9,50 லட்சம் ரூபாய் செலவில் ஐந்தாவது ரயில் தண்டவாளம் அமைக்கும் வேகமாக நடந்து வருகிறது.

30-09-2026 | 14:29


கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

30-09-2026 | 14:29


பொள்ளாச்சி ஜமீன் முத்தூர் அருகே பாலம் கட்டும் பணி நடக்கிறது.

30-09-2026 | 14:29


நாளுக்கு நாள் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது கோவை கொடிசியா ரோட்டில் காணப்படும் கானல் நீர்.

30-09-2026 | 14:29


தாராபுரத்தில் பிரசாரம் செய்ய கோவை விமான நிலையம் வந்த முதல்வர் விஜய்யை காண காத்திருந்த மக்கள்.

30-09-2026 | 14:28


பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியின் நிறுவன நாள் விழாவில், கொல்கத்தா, டாடா மெடிக்கல் சென்டர் முன்னாள் இயக்குநர் மாமன் சாண்டி சிறப்புரையாற்றினார்.

30-09-2026 | 14:27