இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கோவை மாவட்ட கால்பந்து கழகம் சார்பில், பி-டிவிஷன் கால்பந்து போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகின்றன. இதில் அசோகா கால்பந்து அணி மற்றும் பெனிவெலன்ஸ் கால்பந்து அணிகள் மோதின.
25-12-2025 | 14:41
ராணி வேலுநாச்சியார் நினைவு நாள் முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு டில்லியில் இன்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
25-12-2025 | 13:30
மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் கோலம் இடுவதற்காக , கலர் கலராய் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள வண்ண கோலப்பொடிகள். இடம்: உடுமலை
25-12-2025 | 11:06
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குமரலிங்கத்தில் உள்ள பழமையான கரியபிரான் கோவில் சுவற்றில் பொருத்தப்பட்ட நிரந்தர அளவுகோலின் குறியீடு.
25-12-2025 | 10:46
கிழக்கு ஐரோபப்பிய நாடான உக்ரைனின் எல்விவ் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நடைபெற்ற சிறப்பு ஊர்வலத்தில், உற்சாகத்துடன் பங்கேற்ற குழந்தைகள்.
25-12-2025 | 10:40
நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் இப்போதே களைகட்ட துவங்கி விட்டது. ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்முவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், உலகில் அமைதி நிலவ வலியுறுத்தியும் அணிவகுத்த பள்ளி மாணவர்கள்.
25-12-2025 | 10:15