உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கிழக்காசிய நாடான வட கொரியாவுக்கும், அதன் அண்டை நாடான தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் உள்ளது. இந்நிலையில் அணுசக்தி திறனுடன் கூடிய நீர்மூழ்கி கப்பல் தயாரிக்க அமெரிக்காவுடன் தென் கொரியா ஒப்பந்தம் செய்துள்ளது.

26-12-2025 | 09:22


மேலும் இன்றைய போட்டோ

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101வது பிறந்த நாளையொட்டி, அவரது வாழ்வையும், சித்தாந்தத்தையும் பிரதிபலிக்கும் வகையில் உத்தர பிரதேசத்தின் லக்னோவில் அமைக்கப்பட்டுள்ள, தேசிய எழுச்சி தலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதில் அமைக்கப்பட்டுள்ள வாஜ்பாயின் 65 அடி உயர பிரமாண்ட வெண்கல சிலை.

26-12-2025 | 07:14


சென்னை கோயம்பேடு சந்தையில் ஓரளவு கெட்டுப்போன ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை வியாபாரிகள் தூக்கி எறிந்துள்ளனர். மலை போல குவிந்து கிடக்கும் அவற்றில் இருந்து பயோ காஸ் எனப்படும் உயிரி எரிவாயு தயாரிக்க முழுவதும் கெட்டுப்போகாத பழங்களை பிரித்தெடுக்கும் ஒப்பந்த ஊழியர்.

26-12-2025 | 07:02


சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து- ராப்பத்து உற்சவம் நடந்து வருகிறது. பகல் பத்தின் ஆறாவது நாளில், ஸ்ரீ பகாசுரவதம் திருக்கோலத்தில் தேவியருடன் எழுந்தருளிய பார்த்தசாரதி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

26-12-2025 | 06:30


விழுப்புரம் முத்தாம்பாளையம் பகுதியில் சாலை போடும் பணி நடப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

25-12-2025 | 22:38


கோவை சுந்தராபுரம் குறிச்சி பகுதியில் நடந்து வரும் அரவான் திருவிழாவையொட்டி தங்க முக அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அரவான் மற்றும் ஆஞ்சநேயர்.

25-12-2025 | 22:38


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

25-12-2025 | 21:03


முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்.

25-12-2025 | 21:02


தொடர் விடுமுறையில் பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்றதால் பரபரப்பாக காணப்படும் ஓ எம் ஆர் சாலை வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது.இடம் : இந்திரா நகர், அடையாறு

25-12-2025 | 21:01


கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் குவிந்த பொதுமக்களின் கூட்டம்.

25-12-2025 | 21:01