இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
உத்தரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பாவை நாட்டிய வைபவ நிகழ்ச்சியை யொட்டி, பாடல்களுக்கு ஏற்ப பள்ளி மாணவியர் நடனமாடினர்.
29-12-2025 | 07:10
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியின் போது, பெயர் நீக்கப்பட்டவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படுகிறது. உரிய ஆவணங்களுடன் தங்கள் பெயரை சேர்க்க காத்திருந்தோர். இடம்: கொல்கட்டா.
29-12-2025 | 07:00
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில, பறவைகள் இளைப்பாற வசதியாக, குட்டி தீவு போல் மாற்றியுள்ளது வனத்துறை. பறவைகள், மரங்கள் மற்றும் செடிகளுக்காக பள்ளம் தோண்டி தண்ணீர் ஊற்றப்பட்டுள்ளது. இடம்: எல்காட் சாலை அருகே, சோழிங்கநல்லூர்.
29-12-2025 | 06:34
ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க, 75வது ஆண்டு பூஜா மஹோத்ஸவ விழாவில் கேரளாவிலுள்ள புகழ் பெற்ற குருவாயூரப்பன் கோவிலில் இருந்து வருகை தந்த யானைகள் திருவாபரணம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் ஐயப்ப சுவாமியுடன் பக்தர்களிடையே திருவீதி உலா வந்தது.
28-12-2025 | 22:37
சோழிங்கநல்லூர் சட்டசபை தொகுதியில் பிரசாரத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ். இடம்: கந்தஞ்சாவடி
28-12-2025 | 22:35
சென்னை அண்ணாநகர் ஓ ப்ளாக்கில் உள்ள பழைய பொருட்கள் குடோனில் இரவு தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்.
28-12-2025 | 22:34