உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில், பாரத் அட் 2026 என்ற இந்திய அரசின் தமிழ் காலண்டரை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வெளியிட்டார்.

02-01-2026 | 18:38


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டி அருகே குளிச்சோலை பகுதியில் பல ஏக்கர் பரப்பில், பனி காலத்திலும் நல்ல விளைச்சலை கொடுக்கும் வெள்ளை பூண்டு பயிரிடப்பட்டுள்ளது.

09-01-2026 | 08:08


சென்னை கவர்னர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில் பொங்கல் வைத்து கொண்டாடிய கவர்னர் ரவி, அவரது மனைவி லட்சுமி.

09-01-2026 | 07:59


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடில் 10 நாட்கள் சிறப்பு சந்தை துவங்கியது. அங்கு விற்பனைக்கு குவிந்துள்ள பரங்கிக்காய்.

09-01-2026 | 07:37


ஹிமாச்சல பிரதேசத்தில் ஆப்பிள் விளையும் பகுதிகளில் இந்த ஆண்டு போதிய பனிப்பொழிவு இல்லை. இதனால் இரவில் ஆப்பிள் மரங்கள் மீது ஸ்பிரிங்க்லர்ஸ் எனப்படும் நீர் தெளிப்பான்கள் மூலம் மிக மெல்லிய நீர்த்துளிகள் தெளிக்கப்படுகின்றன. அந்த நீர்த்துளிகள் உறைந்து, மரக்கிளைகள் மீது செயற்கை பனி ஊசிகளாக படர்ந்துள்ளது. அதை பார்வையிட்ட விவசாயி.

09-01-2026 | 07:20


நம் நாட்டின் குடியரசு தின விழா வரும் 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.டில்லியில் உள்ள கடமை பாதையில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடந்தன. அதிகாலை நிலவிய கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர் படையினர் தங்களது குதிரைகளுடன் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

09-01-2026 | 06:23


பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

08-01-2026 | 22:51


தேனி வள்ளி நகர் ரேஷன் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு உடன் ரூ.3000 பெற்றுக் கொண்ட பெண்கள்.

08-01-2026 | 21:20


கோவை பூ மார்க்கெட் அருகே போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.

08-01-2026 | 21:20


சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் எழும்பூர் தாளமுத்து நடராஜர் மாளிகை அருகே உள்ள மேம்பாலத்தில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

08-01-2026 | 21:20