இன்றைய போட்டோ
ஒளியும் தாமரையும்: விழித்தெழுந்தவரின் புனிதப் பொருட்கள் என்ற தலைப்பிலான புத்தரின் புனித சின்னங்கள் மற்றும் பழங்கால பொருட்களை உள்ளடக்கிய பிரமாண்டக் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று (ஜனவரி 03) திறந்து வைக்கிறார். இதில் நம் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு மீண்டும் தாயகம் கொண்டு வரப்பட்ட புனிதப்பொருட்கள், பெட்டகங்கள் மற்றும் ரத்தினக் கற்கள் இடம்பெறுகின்றன. கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஒரு சிறிய குகை போன்ற நுழைவாயிலுடன் கூடிய அரைவட்ட வடிவ ஸ்தூபி.
03-01-2026 | 07:31
மேலும் இன்றைய போட்டோ
மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. இதில் மாணவிகள் ஆசிரியர்கள் பொங்கல் வைத்தனர்.
11-01-2026 | 18:05
தொடர் மழையில் நனையாமல் இருக்க துணியை போர்த்திக் கொண்டு சென்றனர். இடம்:திருப்பூர், ராயபுரம்
11-01-2026 | 18:05
கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடந்த திருக்கோயில் தெய்வீக மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ்., நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூல்கள் வெளியிடப்பட்டன. இதில் (இடமிருந்து) பேராசிரியர் ஞானபூபதி, சக்தி குழுமங்களின் தலைவர் மாணிக்கம், ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத பிரச்சார் பிரமுக் சுனில் அம்பேகர், பேரூராதீனம் மருதாசல அடிகளார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் சுவாமி ஹரிவ் ரதானந்தா மகராஜ், சிரவைஆதினம் குமரகுருபர அடிகளார், கற்பகம் கல்விக் குழும தலைவர் வசந்தகுமார், சமய சொற்பொழிவாளர் ஜெயந்தி, முன்னாள் கவர்னர் சண்முகநாதன் ஆகியோர்.
11-01-2026 | 18:04
மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. இதில் மாணவிகள் கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்றனர்
11-01-2026 | 17:56
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் குடும்பத்துடன் பொழுதை கழித்த பொதுமக்கள்.இடம் : கிண்டி
11-01-2026 | 17:56
திருப்பூரில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு, புது மார்க்கெட் வீதியில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள் கூட்டம்.
11-01-2026 | 17:55