இன்றைய போட்டோ
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், இரண்டு தினங்களுக்கு முன் பெய்த பலத்த மழையால், தாமிரபரணி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திருநெல்வேலி ஜங்ஷன் குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவிலை சூழ்ந்தபடி வெள்ளம் செல்கிறது. கோவிலின் மேற்கூரையில் இருந்து நீரில் குதித்து விளையாடிய சிறுவர்கள், இளைஞர்கள்.
04-01-2026 | 07:55
மேலும் இன்றைய போட்டோ
நெரிசல்:காந்தி ஜெயந்தி தொடர்ந்து விடுமுறை என்பதால் சொந்த ஊருக்குத் திரும்பவும் பொதுமக்களால் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல். இடம் :பெருங்களத்தூர்
01-10-2026 | 18:46
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காரியமங்கலம் கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், வி.பி.ஜி., ராம்ஜி திட்டத்தின் கீழ் புதிய சமுதாய குளம் அமைக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டனர்.
01-10-2026 | 17:57
திருவண்ணாமலை அண்ணா சிலை முன், வானியந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி பா.ம.க., மற்றும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
01-10-2026 | 17:57
திருவண்ணாமலை 18 கிராம ஊராட்சிகளை மாநகராட்சி உடன் இணைத்ததை திரும்பப் பெற வேண்டி திருவண்ணாமலை திருவள்ளுவர் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள்.
01-10-2026 | 17:56
திருப்பூரில், தாராபுரம் இடைத்தேர்தல் முன்னிட்டு ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணி எல்.ஆர்.ஜி கல்லூரியில் நடந்து வருகிறது.
01-10-2026 | 14:49
திருப்பூரில், பி. எஸ். என் எல் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் மருத்துவ படி மாதம் 1000 ரூபாய் திரும்ப வழங்க கோரி, ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் உள்ள அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
01-10-2026 | 14:48