இன்றைய போட்டோ
கலை, கலாசாரம், சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையில் ஒடிஷா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வார இறுதியில் பாத உத்சவ் எனப்படும் சாலை திருவிழா நடத்தப்படுகிறது. புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சியில் கடவுள் வேடமணிந்து பங்கேற்ற இளம்பெண்கள் செல்பி எடுத்த படியும், மொபைல் போனில் பேசியபடியும் சென்றனர்.
05-01-2026 | 10:48
மேலும் இன்றைய போட்டோ
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பாப்பனேரி கிராமத்தில், அங்கன்வாடி டீச்சரை மாற்ற வலியுறுத்தி அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்பாமல் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28-09-2026 | 21:48
ரேபீஸ் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்சில் தெரு நாய்களுக்கு, கலெக்டர் பவன் குமார் முன்னிலையில் ஊசி போடப்பட்டது.
28-09-2026 | 21:46
சென்னை ஓ எம் ஆர் சாலையில் டைடல் பார்க் சந்திப்பில் காலை வேளையில் பீக் அவரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவிக்கும் வாகனங்கள்.இடம் : திருவான்மியூர்
28-09-2026 | 21:46
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் , அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தலைவர் ஜே.சி.டி பிரபாகர் தங்க மோதிரங்களை வழங்கினார்.
28-09-2026 | 21:45
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடந்த முதலமைச்சரின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட நிகழ்ச்சியில், தங்க மோதிரம் பெற்ற குழந்தைகள் மற்றும் தாய்மார்கள்.
28-09-2026 | 21:45
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கம் மற்றும் சென்னை பல்கலை இணைந்து நடந்தும், 19வது மாநில மகளிர் மேம்பாட்டு கருத்தரங்கில், வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன், சிறப்பு கையேட்டை வெளியிட்டார்.
28-09-2026 | 21:44
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் போராட்டம் திரும்பப் பெற்றதால் வழக்கம் போல் இயங்கிய வங்கிகள். இடம். சேப்பாக்கம் சென்னை பல்கலை க்களாக இந்தியன் வங்கி.
28-09-2026 | 21:44