இன்றைய போட்டோ
ஹிமாச்சல பிரதேசத்தில் ஆப்பிள் விளையும் பகுதிகளில் இந்த ஆண்டு போதிய பனிப்பொழிவு இல்லை. இதனால் இரவில் ஆப்பிள் மரங்கள் மீது ஸ்பிரிங்க்லர்ஸ் எனப்படும் நீர் தெளிப்பான்கள் மூலம் மிக மெல்லிய நீர்த்துளிகள் தெளிக்கப்படுகின்றன. அந்த நீர்த்துளிகள் உறைந்து, மரக்கிளைகள் மீது செயற்கை பனி ஊசிகளாக படர்ந்துள்ளது. அதை பார்வையிட்ட விவசாயி.
09-01-2026 | 07:20
மேலும் இன்றைய போட்டோ
புதுச்சேரியில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்ற தனியார் ஏ.சி., பஸ் இரவு 9.30 மணிக்கு 100 அடி ரோடு மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த பஸ்சை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர்.
12-01-2026 | 23:43
விண்ணில் தவழும் மேகங்கள் மண்ணிற்கு இடம்மாறியதோ என எண்ணும் வகையில், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நிலவி வரும் கடும் பனி மூட்டத்துக்கு இடையே கங்கை நதியின் மீதுள்ள பாலத்தில் ஊர்ந்து சென்ற ரயில்.
12-01-2026 | 22:34
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த உங்கள் ராணுவத்தை அறிந்து கொள்ளுங்கள் கண்காட்சியின் போது, போர் மற்றும் தற்காப்பு கலைத் திறன்களை நம் ராணுவ வீரர்கள் வெளிப்படுத்தினர். அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் கருவிகளின் அணிவகுப்பு பொது மக்களைக் கவர்ந்தது.
12-01-2026 | 22:34
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபி வளாகப் முன்பு நூதன முறையில் போராடிய பகுதிநேர ஆசிரியர்கள்.
12-01-2026 | 21:51
திருப்பூரில் டிட்டோஜாக் சார்பில் வடக்கு வட்டார கல்வி அலுவலரை கண்டித்து குமரன் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்.
12-01-2026 | 21:51