இன்றைய போட்டோ
திருநெல்வேலி மாவட்டத்தில் கூத்தன்குளம் பறவைகள் சரணாலயம் பக்கம் அமைந்துள்ள கழுவூர் கிராமத்து நீர்நிலைகளுக்கு ஆஸ்திரேலியா, நைஜீரியா,மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து இனப்பெருக்கத்திற்காக வந்த கூழைக்கடா உள்ளீட்ட பறவைகளின் குஞ்சுகள் வளர்ந்து பறக்கும் திறனை பெற்றுவிட்ட நிலையில், தங்கள் தாயகம் திரும்ப தயாராகி வருகிறது.
19-01-2026 | 23:10
மேலும் இன்றைய போட்டோ
மேற்காசிய நாடான லெபனானின் தஹியோவில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலால் உருக்குலைந்த கட்டடம்.
16-03-2026 | 12:21
எரிபொருள் தட்டுப்பாடு அச்சத்தால், கடலுக்கு செல்லாமல் மீன்படி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள். இடம்: மங்களூரு, கர்நாடகா.
16-03-2026 | 12:20
உத்தரபிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில் பங்கேற்க வந்த தேர்வர்கள் வாரணாசி ரயில் நிலையத்திற்கு வெளியே படுத்து உறங்கினர்.
16-03-2026 | 12:20
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சமீபத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் சேதம் அடைந்த கோதுமை வயலை சோகத்துடன் பார்வையிட்ட விவசாயிகள்.
16-03-2026 | 12:19
பங்குனி பிரம்மோத்சவத்தின் 4ம் நாளில், காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள், ஸ்ரீ தேவி, பூ தேவியருடன், சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
16-03-2026 | 12:19
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து மதுரை கே.கே.நகர் ஆவின் ரவுண்டானா பகுதியில் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
15-03-2026 | 20:52
சென்னை மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில் 1008 பால்குட திருவிழாவை முன்னிட்டு கபாலீஸ்வரர் கோவில் இருந்து கோலவிழி அம்மன் கோவில் வரை ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
15-03-2026 | 18:06