உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக பனி கொட்டி வருகிறது. குறிப்பாக கம்சத்கா தீபகற்பத்தில் பல மாதங்களில் பொழிய வேண்டிய பனி, சில நாட்களிலேயே கொட்டியுள்ளது. இதனால் 16 அடி உயரம் வரை பனி குவிந்துள்ளது. சில இடங்களில் 9வது மாடி வரை பனி குவிந்திருந்தது.

21-01-2026 | 06:30


மேலும் இன்றைய போட்டோ

சட்டப்பேரவை கூட்டத்துடன் நடந்து வரும் நிலையில் தலைமைச் செயலக வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க வலைகளுடன் வளம் வந்த மாநகராட்சி ஊழியர்கள்.

23-01-2026 | 17:17


சம வேலைக்கு, சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 29வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இடம்: பிராட்வே.

23-01-2026 | 17:16


சட்டப்பேரவை கூட்டதொடரை பார்வையிட வந்த தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள்.

23-01-2026 | 17:16


ஊட்டியில், தற்போது கடும் குளிரான காலநிலையால், மார்கெட் வளாகத்தில் தீமூட்டி குளிர்காயும் தொழிலாளர்கள்.

23-01-2026 | 14:40


ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்துக்கொண்ட விவசாயிகள்.

23-01-2026 | 14:40


ஊட்டி ஸ்டிபன் சர்ச் வளாகத்திலுள்ள, தாவரவியல் பூங்காவை உருவாக்கிய வில்லியம் கிரகாம் மெக்ஐவரின் கல்லறையை மனைவி வழி உறவினர்கள் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

23-01-2026 | 14:40


குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் முப்படை வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

23-01-2026 | 13:33


குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது.

23-01-2026 | 13:32


குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் அருணாச்சலப் பிரதேச மாநில ஒத்திகை கலை நிகழ்ச்சி நடந்தது.

23-01-2026 | 13:32