உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கின் தியோலாலியில் நடந்த 'எக்சர்சைஸ் தோப்சி 2026' பயிற்சியில், நம் ராணுவத்தின் பீரங்கிப் படை தன் பிரமாண்ட வலிமையை நிரூபித்தது. 38 கி.மீ., தூரம் வரை இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் உடைய உள்நாட்டு தயாரிப்பான தனுஷ் பீரங்கியை சோதித்து பார்த்தது.

22-01-2026 | 06:30


மேலும் இன்றைய போட்டோ

மஹாராஷ்டிராவின் மும்பையில் சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்களில் நிலக்கரி அடுப்பில் உணவு தயாரிக்க துவங்கியுள்ளனர்.

12-03-2026 | 07:57


எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியதால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள், பெட்ரோல் 'பங்க்'குகளில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இடம்: முகப்பேர், சென்னை.

12-03-2026 | 07:15


இந்தியாவின் இமயமலை மற்றும் இலங்கை நாட்டில் வாழும் பெரிய பூங்குருவி, இனப்பெருக்கத்திற்காக இலங்கையில் இருந்து தமிழகம் வழியே இமயமலைக்கு வலசை செல்லும் நிலையில், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் முதல் முறையாக தென்பட்டது.

12-03-2026 | 07:11


விழுப்புரம் வண்டி மேடு அருகே உள்ள பெட்ரோல் பங்கில் ஏராளமான கூட்டம்

11-03-2026 | 23:22


வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையால் முன்பதிவு செய்தும் கிடைக்காத வாடிக்கையாளர்கள் கேஸ் ஏஜென்சி வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.இடம் : திருவான்மியூர்

11-03-2026 | 19:06


வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையை பயன்படுத்தி கூடுதலாக மெக்கானிக் சார்ஜ் எனக்கூறி 236 சேர்த்து 1165 ரூபாய்க்கு விற்கப்படும் சிலிண்டர்.இடம் : திருவான்மியூர்

11-03-2026 | 19:06


கமர்சியல் எல்.பி.ஜி., எரிவாயு தட்டுப்பாட்டால் குறைக்கப்பட்ட உணவு பட்டியல் குறித்த அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இடம்: காந்திபுரம் தனியார் உணவகம்.

11-03-2026 | 19:05


வெப்பத்திலிருந்து தப்பிக்க ஷெட்டின் மீது கிற்றுகூரை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இடம். வடலூர் நான்கு முனை சந்திப்பு

11-03-2026 | 19:05


திருப்பூரில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குநர் பிஜூ பேசினார்.

11-03-2026 | 19:04