உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகையில் நம் ராணுவத்தின் ரஞ்சித் என்று அழைக்கப்படும் நிலப்பரப்புகளிலும் இயங்கும் ஏடிவி வாகனம் பங்கேற்றது. மணல், சேறு, சதுப்பு நிலம் மற்றும் கரடுமுரடான மலைப்பாதைகள் என எவ்வித கடினமான பாதையிலும் இந்த வாகனம் தடையின்றி இயங்கும்.

22-01-2026 | 22:29


மேலும் இன்றைய போட்டோ

போர்க்களம் அல்ல வெறும் போராட்டம் தான் எதற்கு மூன்று துப்பாக்கி அஞ்ச மாட்டான் இந்த தொண்டன்.இடம் புதுச்சேரி.

22-01-2026 | 22:17


கோவை சித்தாப்புதூர் சி. எம். சி., காலனி பொது மக்கள் சுருப்புக்கொடி ஏந்தி மாநகராட்சியை கண்டித்து போராட்டம் நடந்த முயன்றதால் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

22-01-2026 | 22:16


விறுவிறுப்பாக நடந்து வரும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பணி

22-01-2026 | 18:49


ரங்கநாத பெருமாள் கோவில் குளம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இடம்: திருநீர்மலை

22-01-2026 | 18:49


கோவையில் விரைவில் திறக்கப்படவுள்ள மதுக்கரை - மாதம்பட்டி வரையிலான மேற்கு புறவழிச்சாலையின் பிரம்மாண்டம் இது.

22-01-2026 | 18:49


திருநெல்வேலி மாவட்டம் கூந்தன் குளம் பறவைகள் சரணாலய குளத்திற்கு மணிமுத்தாறு அணை நீர் இந்த முறை இன்னும் வராததால் குளம் வெறிச்சோடி காணப்படுகிறது.

22-01-2026 | 18:48


சென்னையில் போதை தலைக்கேறி சாலையில் படுத்து உறங்கும் குடிமகன். இடம்: வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகே, மின்ட்.

22-01-2026 | 18:47


தலைமைச் செயலகத்தில் நடந்து வரும் சட்டசபை கூட்டத் தொடரை காண வந்த பள்ளி மாணவர்கள்.

22-01-2026 | 18:46


தலைமைச் செயலகத்தில் நடந்து வரும் சட்டசபை கூட்டத் தொடரை காண வந்த கூடலூர் பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்கள்.

22-01-2026 | 18:46