இன்றைய போட்டோ
மேற்குவங்க மாநிலம் கொல்கட்டாவில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகையில் நம் ராணுவத்தின் ரஞ்சித் என்று அழைக்கப்படும் அனைத்து நிலப்பரப்புகளிலும் இயங்கும் ஏ.டி.வி., வாகனம் பங்கேற்றது. மணல், சேறு, சதுப்பு நிலம் மற்றும் கரடுமுரடான மலைப்பாதைகள் என கடினமான பாதையிலும் இந்த வாகனம் தடையின்றி இயங்கும்.
23-01-2026 | 07:11
மேலும் இன்றைய போட்டோ
சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், உறுப்பினர்கள் யாரையும் நாய்கள் கடித்துவிடக்கூடாது என்பதற்காக சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க வலைகளுடன் வலம் வந்த மாநகராட்சி ஊழியர்கள்.
24-01-2026 | 08:53
விவசாயிகள் பயிரிட்டுள்ள கரும்பில் பூக்கள் பூத்துள்ளது காண்பதற்கு ரம்யமாக உள்ளது. இடம்: பள்ளபாளையம், உடுமலை.
24-01-2026 | 08:49
ஊட்டி காமராஜர் சாகர் அணையில் முழு கொள்ளளவில் தண்ணீர் இருப்பதால் கோடையில் வன விலங்குகளின் தாகத்தை தணிக்க தடையின்றி தண்ணீர் வழங்கும் சூழ்நிலை உள்ளது.
24-01-2026 | 08:43
அமெரிக்காவின் சிகாகோ பகுதிகளில் பொதுவாக ஜனவரி மாதத்தில் குளிர் நிலவுவது வழக்கம். ஆனால் நடப்பாண்டில் நிலவும் கடும் குளிர் அங்குள்ள மிச்சிகன் ஏரியையே உறைய செய்துள்ளது. பனியால் சூழப்பட்ட ஏரியின் அழகை ரசித்த மக்கள்.
24-01-2026 | 06:57
ஆர்.இ.சி., முன்னாள் மாணவர்கள் பொன்விழா சந்திப்பு! : திருச்சியில், 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' என பெயர் மாற்றப்பட்ட, அப்போதைய ஆர்.இ.சி., எனும் ரீஜினல் இன்ஜினியரிங் கல்லூரியில், 1971 - 76ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின் மூன்று நாள் பொன்விழா சந்திப்பு, மாமல்லபுரத்தில் நேற்று நிறைவடைந்தது. சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற கல்லுாரியின் கணிதத் துறை ஓய்வு பெற்ற பேராசிரியர் கருப்பன் செட்டி, அமெரிக்காவில் பணிபுரியும் மருத்துவ நிபுணர் பால் பழனியப்பன் ஆகியோருடன் முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
24-01-2026 | 05:28
கோவை ராம்நகர் காட்டூர் டாக்டர் ராஜரத்தினம் தெருவில் உள்ள ஆட்டோமொபைல் உதிரிபாகம் கடையில் ஏற்பட்ட பயங்கர தீயினால் ஏற்பட்ட கரும்புகை பல கிலோமீட்டர் தூரம் வரை தென்பட்டது.
23-01-2026 | 23:02