இன்றைய போட்டோ
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த அஜிதா, 46, என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த துயரமான நேரத்திலும் உறுப்பு தானத்திற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்ததால், ஆறு பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. அஜிதாவின் குடும்ப உறுப்பினர்களை நேரில் வரவழைத்த கவுரவித்த மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். இடம்: திருவனந்தபுரம்.
29-01-2026 | 08:34
மேலும் இன்றைய போட்டோ
தைப்பூசத்தை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
01-02-2026 | 17:41
தைப்பூசத்தை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
01-02-2026 | 17:40
திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் தைபூசம் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது.
01-02-2026 | 17:39
தைப்பூசம் முன்னிட்டு காரமடை அருகே உள்ள குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் தேரோட்டம் நடந்தது.
01-02-2026 | 17:39
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.
01-02-2026 | 17:38
தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
01-02-2026 | 10:47
பழநி முருகன் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் வாகனங்களில் வந்ததால் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
01-02-2026 | 10:47