இன்றைய போட்டோ
ஐரோப்பிய நாடான இத்தாலியின் சிலிலான் நகருக்கு அருகே சமீபத்தில் வீசிய புயலால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மலைப்பகுதியில் 4 கி.மீ., தூரத்துக்கு 65 அடி அகலத்துக்கு உள்ள நிலம் சரிந்து கிடக்கும் காட்சி. இதையடுத்து 50 அடி அகலமுள்ள பகுதி பாதுகாப்பற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டு, 1,500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
29-01-2026 | 09:26
மேலும் இன்றைய போட்டோ
காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் உள்ள காஞ்சி சங்கர மடத்திற்கு அசாம் மாநிலத்தில் இருந்து பிஜிலி என்ற 5 வயது பெண் யானை வந்தது. மடத்தில் உள்ள மையத்தில் யானை பராமரிக்கப்படும் என அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
26-09-2026 | 08:57
அனந்த் சதுர்தசி தினத்தில் விநாயகர் விசர்ஜனம் எனப்படும் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்வு மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்தது. அதில் வண்ணப்பொடிகள் தூவி கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலை.
26-09-2026 | 08:52
புதுச்சேரி உள்ளாட்சித் துறை தூய்மை பாரத இயக்கம்-நகர்ப்புறம் 2.0 திட்டத்தின் கீழ் கம்பன் கலை யரங்க வளாகத்தில் கல்லூரி மாணவிகளுக்கான கோலப்போட்டி நடந்தது.
25-09-2026 | 14:28
ஆபத்தான நிலையில் சாலையை கடக்கும் பொதுமக்கள்.இடம்: தே.மு.திக அலுவலகம் அருகே,கோயம்பேடு .
25-09-2026 | 14:25