இன்றைய போட்டோ
திருச்சி துவாக்குடியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ரீஜினல் இன்ஜினியரிங் கல்லூரி) தொழில்நுட்பக் கல்லூரியில் 40 வருடங்களுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது 2023-ம் ஆண்டின் சிறந்த மாணவருக்கான விருது தினமலர் வெளியீட்டாளர் எல்.ஆதிமூலத்திற்கும் (இடது), 2024-ம் ஆண்டிற்கான சிறந்த மாணவருக்கான விருது சிவ.நமச்சிவாயத்திற்கும் வழங்கப்பட்டது. இவ்விருதுகளை கல்லூரி இயக்குனர் அகிலா வழங்கினார்.
06-02-2026 | 14:36
மேலும் இன்றைய போட்டோ
திருவண்ணாமலை தீபத்திருவிழா 8ம் நாள் காலை உற்சவத்தில், குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி மாட வீதி உலா வந்தார்.
22-11-2026 | 14:13
உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது.
22-11-2026 | 13:57
உடுமலை ஐஸ்வர்யா நகர் ரோட்டில் உள்ள வேகத்தடையில் வெள்ளை கோடுகள் அடிக்காதால் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
22-11-2026 | 13:56
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
22-11-2026 | 13:55