இன்றைய போட்டோ
மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவின் பாரம்பரியச் சின்னமாகத் திகழும் டிராம் போக்குவரத்து துவங்கப்பட்டு,153வது ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இதை முன்னிட்டு, வரலாற்று சிறப்புமிக்க 498 எண் கொண்ட கீதாஞ்சலி டிராம் மீது மலர்களை தூவி மக்கள் மரியாதை செய்தனர். ஆசியாவிலேயே பழமையான மற்றும் இந்தியாவில் இன்றும் கொல்கட்டாவில் மட்டுமே டிராம் சேவை பயன்பாட்டில் உள்ளது.
24-02-2026 | 22:28
மேலும் இன்றைய போட்டோ
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், பெண்களுக்கான தொடர் ஓட்ட இறுதி பந்தயத்தில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனையர் கிரண், பிராச்சி, பூவம்மா மற்றும் வித்யா ஆகியோர் தங்களின் வரலாற்றுச் சாதனை வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடிய தருணம்!
29-09-2026 | 22:38
கோவை அருகே, 'குட்கா' கடத்தல் கும்பலை பிடிப்பதற்காக, உயிரைப் பணயம் வைத்து, 40 கி.மீ., துாரம் காரின் மேல் பயணித்த போலீஸ் ஏட்டு வேல்முருகனை நேரில் அழைத்து, முதல்வர் விஜய் பாராட்டினார். இடம்: தலைமை செயலகம், சென்னை.
29-09-2026 | 22:38
இந்த பாதையில் சாதாரண வாகனங்கள் ஓட்டிச் செல்வதே சிரமம். மாற்றுத் திறனாளிகளின் நிலைமையை நினைத்து பாருங்கள். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் செல்லும் பாதை இது என்பது தான் அவலத்தின் உச்சம்.
29-09-2026 | 22:38
வறட்சியால் தவிக்கும் வனவிலங்குகள்கடும் வெயில் காரணமாக வனப்பகுதிகள் வறட்சி நிலவுகிறது. வனத்தையொட்டிய குடியிருப்பு பகுதிக்குள் உணவைத் தேடி நுழைந்த மான் கூட்டம். இடம்: ஊட்டி சாலை, மேட்டுப்பாளையம்
29-09-2026 | 22:38
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கிண்ணக்கொரை மலைத் தொடரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் ஸ்டாபிலாந்தஸ் குத்தியானஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட நீல குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளதால் காலை நேர வெயிலின்போது அப்பகுதி ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
29-09-2026 | 22:38
வசீகரிக்கும் பசுமைவால்பாறையில் மழை பொழிவு குறைந்த நிலையில் தேயிலை செடிகளில் துளிர்விட்டு பசுமையாக காட்சியளிக்கின்றன. சுற்றுலா வருவோர் வசீகரிக்கும் தேயிலை தோட்டங்களில் போட்டோ ஷூட் செய்யாமல் நகர்வதில்லை. இடம்: ஸ்டான்மோர் எஸ்டேட்.
29-09-2026 | 22:37
கை கொடுக்குமா மழைபசுமையாக காணப்படும் அமராவதி அணை பூங்கா மழையின்றி பொலிவிழந்து காணப்படுகிறது. மழை பொழிந்து செழிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
29-09-2026 | 22:37