உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவம் முன்னிட்டு, சிம்ம வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

26-02-2026 | 16:49


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்றவர்கள்.

28-02-2026 | 14:24


கோவை விஓசி பூங்காவில் பள்ளிக் குழந்தைகள் ஜாலியாக விளையாடினர்.

28-02-2026 | 14:23


புதுச்சேரி அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில் 58 வது உதய தினத்தை முன்னிட்டு மாத்திர் மந்திர் அருகே உள்ள ஆம்பி தியேட்டரில் பல்வேறு நாட்டினர் ஒன்று கூடி தீ மூட்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.

28-02-2026 | 14:23


புதுச்சேரி - திண்டிவனம் நான்கு வழி சாலை மொரட்டாண்டி பகுதியில் அதிக அளவு பனி பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

28-02-2026 | 14:22


திருத்தேரோட்டம்!சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி-வடிவுடையம்மன் கோவிலில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது. 46அடி உயர திருத்தேரில் சந்திரசேகரர் -திரிபுர சுந்தரி தாயார் எழுந்தருளி மாட வீதி உலா வந்தனர்.

28-02-2026 | 14:22


இளம் பருவ பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டத்தை புதுச்சேரியில் கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

28-02-2026 | 14:20


தேர்தலில் விவசாயி சின்னம் கேட்கறாங்க; விவசாயி மாதிரி போஸ் கொடுக்கறாங்க. ஒரு நாள் விவசாயா வாழ்ந்து பார்த்தால் தான் அவங்களோட கஷ்டம் புரியும். இடம்: பொள்ளாச்சி.

28-02-2026 | 10:34


குன்னூர் உலிக்கல் பகுதியில் பசுமையாக காட்சி அளிககும் தேயிலை தோட்டம் சுற்றுலா பயணிகளை பரவசப்படுத்துகிறது.

28-02-2026 | 10:34


காஞ்சிபுரம் குன்றத்தூர் முருகன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ திருத்தேர் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

28-02-2026 | 10:33