இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கார்த்திகை மாதம் சோமவார முதல் திங்களை முன்னிட்டு திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.
23-11-2026 | 14:13
உடுமலை ஜல்லிபட்டியில் விவசாயிகள் தென்னை மரத்திற்கு ஊடுபயிராக மஞ்சள் பயிரிட்டுள்ளனர்.
23-11-2026 | 14:11
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 101வது அவதார தினத்தை முன்னிட்டு மேட்டுப் பாளையம் ஆலாங்கொம்பு ஸ்ரீ சீரடி சாய்பாபா மற்றும் ஸ்ரீ சத்ய சாய் மந்திரில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
23-11-2026 | 14:09
விருத்தாசலம் -ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் உள்ள டிவி புத்தூர் வெள்ளாற்று பாலத்தில் கீழ்பகுதியில் சேதமடைந்த பகுதியை நெடுஞ்சாலைத்துறையினர் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
23-11-2026 | 14:06
கார்த்திகை தீபத்தையொட்டி, தீபம் ஏற்றுவதற்கு விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கும் பெண்கள். இடம்: திருப்பூர்.
23-11-2026 | 10:03
கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள வையாபுரி விநாயகர் கோவில் குளம் முறையான பராமரிப்பு இல்லாமல் பாசி படர்ந்து பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது. இடம்: ஈஞ்சம்பாக்கம்.
23-11-2026 | 10:02
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா மகா தீப கொப்பரையை, சின்ன நந்தி முன் வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.
23-11-2026 | 08:33