இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
மேற்காசிய நாடான லெபனானின் தஹியோவில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலால் உருக்குலைந்த கட்டடம்.
16-03-2026 | 12:21
எரிபொருள் தட்டுப்பாடு அச்சத்தால், கடலுக்கு செல்லாமல் மீன்படி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள். இடம்: மங்களூரு, கர்நாடகா.
16-03-2026 | 12:20
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சமீபத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் சேதம் அடைந்த கோதுமை வயலை சோகத்துடன் பார்வையிட்ட விவசாயிகள்.
16-03-2026 | 12:19
பங்குனி பிரம்மோத்சவத்தின் 4ம் நாளில், காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள், ஸ்ரீ தேவி, பூ தேவியருடன், சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
16-03-2026 | 12:19
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து மதுரை கே.கே.நகர் ஆவின் ரவுண்டானா பகுதியில் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
15-03-2026 | 20:52
சென்னை மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில் 1008 பால்குட திருவிழாவை முன்னிட்டு கபாலீஸ்வரர் கோவில் இருந்து கோலவிழி அம்மன் கோவில் வரை ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
15-03-2026 | 18:06
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் வைப்பாறு மணற்பரப்பில் குழி தோண்டப்பட்டு அதில் வரும் ஊத்து தண்ணீரை குடிக்க எடுத்துச்செல்லும் அப்பகுதி மக்கள்.
15-03-2026 | 18:05