உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புதுச்சேரியில் தேர்தல் பிரச்சார ரோட் ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்வதை முன்னிட்டு அஜந்தா சிக்னலில் டிஐஜி ஷாலினி சிங் தலைமையில் போலீசார் ஆய்வு நடத்தினர்.

02-04-2026 | 22:48


மேலும் இன்றைய போட்டோ

ஆசிய விளையாட்டு கலப்பு அணிகளுக்கான 4*400 மீ தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது; மூவர்ணக்கொடியுடன் வெற்றியை கொண்டாடிய வீரர்-வீராங்கனையர். இடமிருந்து: மானு, பூவம்மா, விஷால், வித்யா. இடம்: நகோயா நகரம், ஜப்பான்.

25-09-2026 | 07:00


திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு புதிதாக வந்த எட்டு வயது கீலால் யானை வருகை தந்தது ஒட்டி பக்தர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

24-09-2026 | 22:05


ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் கைதான மகேந்திர சிம்ஹன் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க , சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் போக்சோ நீதிமன்றம் அழைத்து வந்தனர். இடம்: சென்னை உயர் நீதிமன்றம்.

24-09-2026 | 20:52


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு சந்தனம் அபிஷேகம் நடந்தது.

24-09-2026 | 18:13


சரி செய்யப்பட்டது!வடகோவை வனக்கல்லூரி நுழைவாயில் எதிரே ரோட்டின் நடுவே உடைந்திருந்த பாதாள சாக்கடை குழாயின் மூடியின் இரும்பு பகுதி சரி செய்யப்பட்டது.

24-09-2026 | 16:42


முழு வீச்சு!மாதவரம் - சிறுசேரி வழித்தடத்தில் மணப்பாக்கம் அருகே மெட்ரோ மேம்பாலத்தில் ரயில் பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : மணப்பாக்கம்

24-09-2026 | 16:02


இந்தியாவில் உள்ள, 12 வகையான பாரம்பரிய கலாச்சார கைவண்ண ஓவியங்கள் கொண்ட மூன்று நாள் கண்காட்சி அடையாறில் துவங்கியது. இடம்: அடையாறு

24-09-2026 | 08:07


குளிர்பான விளம்பர பலகை முன் ஹாயாக அமர்ந்து விளம்பர மாடல் மங்கைக்கே டப் கொடுத்த மங்கியாரின் சேட்டை... அந்த நொடியில் நம் புகைப்பட கலைஞரின் கேமராவுக்கு நல்ல வேட்டை!. இடம்: உடுமலை, திருப்பூர்.

24-09-2026 | 06:27


திருவண்ணாமலையில், சாலை விபத்தில் ரூ.33 லட்சம் இழப்பீடு தராத அரசு பேருந்தை, நீதிமன்ற உத்தரவுப்படி பஸ்நிலையத்தில் ஜப்தி செய்த அரசு பேருந்து.

23-09-2026 | 16:33