உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டசபை தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் துர்கை அம்மனுக்கு சிறப்பு யாகம் நடந்தது. பின் கோவிலில் தரிசனம் செய்த அவர் புதுமண தம்பதியருக்கு ஆசி வழங்கினார்.

07-04-2026 | 06:17


மேலும் இன்றைய போட்டோ

பறவைகளின் மைண்டுவாய்ஸ்!வளர்ச்சிங்ற பேருல நாம கூடு கட்டி வாழ்ந்த மரத்தையெல்லாம் வெட்டிட்டாங்க; எல் நினோ தாக்கத்தால் சூரியனும் சுட்டெரிக்குது. இப்படியே போனா குடிக்க தண்ணீ கூட கிடைக்காது போலிருக்குனு, வேதனையை பகிர்ந்து கொள்கின்றனவோ கொண்டலாத்தி பறவைகள். இடம்:உடுமலை

02-10-2026 | 22:28


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து ரோடு ஷோ நடத்திய முதல்வர் விஜய், ராமாபுரம் கிராமத்திற்கு சென்ற போது சிறிது நேரம் டிராக்டர் ஓட்டினார்.

02-10-2026 | 22:27


ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெனற தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டுதுறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வாழ்த்து தெரிவித்தார். பதக்கம் வென்றவர்களுக்கு 6.50 கோடி ரூபாய் ஊக்கத்தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இடம்: நேரு உள்விளையாட்டு அரரங்கம், சென்னை.

02-10-2026 | 22:26


மஹாத்மா காந்தியின் 157 வது பிறந்த நாள் இன்று ( அக்.,02) கொண்டாடப்பட்டது. தெலுங்கானா தலைநகர் ஐ தராபாத்தில் உள்ள காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பெண்கள்.

02-10-2026 | 22:26


ஊட்டி நகரில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கட்டடம் தற்போது அரசு கலைக்கல்லூரி. பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டுள்ளது.

02-10-2026 | 22:26


தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து, நடந்த பொதுக்கூட்டத்தில் ஓட்டு சேகரித்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின். அருகில் வேட்பாளர் சுகன்யா. இடம்: உடுமலை ரோடு.

02-10-2026 | 21:33


அய்யா வைகுண்ட தர்மபதி கோவில், புரட்டாசி திருவிழா, திருநாமக் கொடியேற்றத்துடன், துவங்கியது. இடம்: மணலிபுதுநகர்.

02-10-2026 | 18:40


சென்னை கொரட்டூர் ஏரியில் இரை தேடும் கூழைக்கடா பறவைகள்.

02-10-2026 | 18:40


திருவள்ளூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று நடந்த மகளிர்க்கு இலவச வெற்றி பயணம் திட்டத்தினை வழித்தடம் 97 திருத்தணிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து பயணம் செய்தார்

02-10-2026 | 18:40