உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகர்களுடன் போட்டோ எடுப்பதற்காக வைக்கப்பட்டுள்ள கட்அவுட்கள்.

07-04-2026 | 20:35


மேலும் இன்றைய போட்டோ

கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து காக்க காக்கா குளியல் போட்ட காளையார் கோயில் யானை.

11-04-2026 | 18:28


கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது

11-04-2026 | 18:28


மங்கலம்பேட்டை பகுதியில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதாவிற்கு ஓட்டு சேகரிக்க சென்று பொழுது பள்ளி சிறுவர்களை சந்தித்த அவரது மகன் சண்முக பாண்டியன்

11-04-2026 | 18:28


உயிர் காப்பான் தோழன் என்பது அது அந்த காலம் உயிரினும் மேலான மகனுக்கு உதவும் தந்தை இது இந்த காலம் இடம் புதுச்சேரி காமராஜ் சாலை.

11-04-2026 | 18:26


நீரோட்டத்திற்கு தடையாக, மதுரவாயல் வழியாக செல்லும் கூவம் ஆற்றில் அதிக அளவில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்

11-04-2026 | 18:26


பாடி குப்பம் சாலை - கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்திற்கு மாற்றாக உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

11-04-2026 | 18:25


திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் சுவாமி தரிசனம் செய்தார்.

11-04-2026 | 18:25


சரவெடியில் சாகசம் பண்றாங்கன்னு பயந்தராதீங்க... எல்லாம் வேட்பாளர் வரவேற்புக்கு தான். இடம்: கோவை சங்கனூர் ரோடு

11-04-2026 | 18:25


தேர்தல் விதிமுறைகள் அமுலில் உள்ள நிலையில் வாகனத்தில் இவ்வளவு கட்சி கொடிகளை எங்கு கொண்டு செல்கிறார்களோ. இடம், தேனி- மதுரை ரோடு.

11-04-2026 | 18:24