உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவின் ரிச்பர்க் பகுதியில் உள்ள மையத்தில் காட்டுத்தீ குறித்து ஒரு முக்கிய ஆய்வு நடைபெற்றது. காட்டுத்தீ ஏற்படும் போது குடியிருப்புகளை தீ விபத்துக்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த தரவுகளை சேகரிக்க இந்த சோனை நடத்தப்பட்டது.

22-04-2026 | 07:25


மேலும் இன்றைய போட்டோ

சுடும் வெயிலில் ஒரு துளி தண்ணீருக்காக இது போன்ற பறவைகள் பல தவிக்கின்றன. நம் வீடு, அலுவலக மாடிகளில் திறந்த வெளியிடங்களில் சிறு குவளையில் குடிநீர் வைத்து இது போன்ற நம் சக ஜீவன்களை காப்போம். இடம்: கோவை, திருச்சி சாலை.

27-04-2026 | 06:53


கோவை பாரதியார் பல்கலை வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் துவங்கியுள்ள, கோடை கால நீச்சல் பயிற்சியில் கொண்டாட்டம் போடும் குட்டீஸ்.

27-04-2026 | 06:48


உத்தரபிரதேச போலீஸ் துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட பெண் போலீசார் தங்கள் பயிற்சியை நிறைவு செய்த நிலையில், அணிவகுப்பு நிகழ்ச்சியில் கம்பீரமாக பங்கேற்றனர். இடம்: வாரணாசி.

27-04-2026 | 06:44


ஜம்மு காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் ஆப்பரேஷன் சத்பாவ்னா எனும் நல்லெண்ணம் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ முகாமில், நம் ராணுவத்தினர் அங்குள்ள உள்ளூர் மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

27-04-2026 | 06:41


கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவை முன்னிட்டு நடந்த வண்ணக்குடை மாற்றும் நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

27-04-2026 | 06:36


சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குடும்பத்துடன் குவித்த மக்கள்.

26-04-2026 | 20:04


திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள காமாட்சி அம்மன் கோவில், பொங்கல் விழாவை முன்னிட்டு மஹா சண்டி ஹோமம் நடந்தது.

26-04-2026 | 14:07


உடுமலை பழனியாண்டவர் நகரில் பொதுமக்கள் குடிப்பதற்காக மண்பானையில் வெட்டிவேர் தண்ணீர் வைத்துள்ள மூதாட்டி.

26-04-2026 | 13:16


கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் சங்காபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது.

26-04-2026 | 13:15